நந்தினி தொடர் புகழ் நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்

நந்தினி தொடர் புகழ் நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல் நந்தினி. இந்தத்தொடரில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராகுல் ரவி. தொடர்ந்து சன் டிவியில் ‘சாக்லேட்’ சீரியலில் நடித்து வந்தார். நன்றாக ஓடிக்கொண்டிருந்த அந்த சீரியல் கொரோனா லாக்டவுனில் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ‘கண்ணான கண்ணே’ என்னும் சீரியலில் நடித்தார். கேரளாவைச் சேர்ந்த ராகுல் ரவி பார்க்க செம கியூட்.. அதோடு ஏராளமான பெண்கள் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. அவரது மனைவி பெயர் லட்சுமி நாயர்.

நந்தினி தொடர் புகழ் நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்

அவரது மனைவி ராகுலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டி புகார் அளித்தார். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, ராகுல்ரவி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள் , அவருக்கு முன்ஜாமீன் வழங்கினர்.

Share this story