கர்ப்பகாலத்தில் ஏஞ்சலாக மாறிய நீலிமா... வித்தியாசமான போட்டோஷூட்டுக்கு வரவேற்பு !
ஏஞ்சல் போன்று கர்ப்ப காலத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை நீலிமா ராணி வெளியிட்டுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் நீலிமா ராணி. தெலுங்கு சீரியல் ஒன்றின் மூலம் அறிமுகமான இவர், 2000-ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருந்தார். தமிழில் புகழ்பெற்ற சீரியல்களான ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல மெகா சீரியல்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அரண்மனை கிளி’ சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களை தொடர்ந்து பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே சீரியல்களில் தன்னுடன் நடித்த இசைவாணன் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். இதையடுத்து சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக நீலிமா அறிவித்திருந்தார். இந்நிலையில் ஏஞ்சல் போன்று இருக்கும் வித்தியாசமான புகைப்படங்களை நீலிமா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.