சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்... என்ன சீரியல் தெரியுமா ?

anitha sampath

பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுத்துள்ளார்.  

சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத். அழகான செய்தி வாசிப்பாளராக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அவரை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

anitha sampath

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது செய்தி வாசிப்பாளர் பணியை உதறி தள்ளினார். அதன்பிறகு தனது தந்தை மறைவால் மன வேதனையில் இருந்த அனிதா சம்பத், சமீபகாலமாக யூடியூப்பில் சில நிகழ்ச்சிகளை பிசியாக தொகுத்து வழங்கி வந்தார். 

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘மந்திரப்புன்னகை’ என்ற விறுவிறுப்பாக சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிதா சம்பத் நடித்து வருகிறார். அதாவது கதாநாயகிக்கு தோழியாக வரும் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.  

 

Share this story