மீண்டும் தலைவரான 'ஜிபி முத்து' - களைக்கட்டிய ‘பிக்பாஸ்’ வீடு

photo

பிக்பாஸ் வீடு தற்போது பழைய ஹவுஸ்மேட்ஸ்ஸின் வருகையால் புத்துயிர் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக ஜிபி முத்துவின் வருகை வேறலெவல் என்றுதான் சொல்ல வேண்டும்.

photo

பிக்பாஸ் தமிழ் இது வரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனும் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. அந்த வகையில் வீட்டில் தற்போது ஏழு போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். இந்த வாரம் Ticket to Finalaeவை வென்ற அமுதவாணனை தவிர மற்றவர்கள் நாமினேஷனில் உள்ளனர். அதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

photo

தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் பிக்பாஸ்வீட்டில் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர் ஆகியோர் வந்துள்ளனர். அதுபடி ‘நீங்களும் ஆகலாம் பிக்பாஸ்’ டாஸ்கில் ஏடிகே பிக்பாஸ்ஸாக இருக்கிறார், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவர் ஜிபி முத்துவை வீட்டின் தலைவராக்கியுள்ளார். தொடர்ந்து  ஜிபி முத்து செய்யும் ரகளை, ஹவுஸ்மேட்ஸ்ஸின் கலாய் என பிக்பாஸ் வீடே களைக்கட்டியுள்ளது. இந்த புரோமோ இன்றைய எப்பிசோடுக்கான எதிர்பார்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Share this story