‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துக்கு புது வரவு வந்தாச்சு!....- இதோ லேட்டஸ்ட் புரொமோ..

சின்னத்திரை சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டளம் உள்ளது. தற்போது பரபரப்பான கதைகளத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முக்கிய திருப்பமாக தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த மீனா மற்றும் முல்லையை குடும்பத்தாரிடம் உண்மையை கூறவிடாமல் தனம் தடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனத்திற்கு புற்றுநோய்கான சிகிச்சை தொடரவேண்டும் என்றால் குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியில் எடுத்து வேண்டும் என மருத்துவர் கூற. ஏதேதோ கூறி குடும்பத்தாரை ஆபரேஷனுக்கு சம்மதிக்க வைக்கிறார்கள் மீனாவும், முல்லையும்.
ஒருவழியாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புது வரவாக பெண் குழந்தை பிறந்துள்ளது . இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்ததாக தனத்திற்கு புற்றுநோய்கான சிகிச்சை எப்படி நடக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அந்த உண்மை எப்படி, எப்போது தெரியவரும் என்பதே கதையின் அடுத்தகட்ட நகர்வாக உள்ளது.