அட... காவ்யாவுக்கு பதில் இவரா ?... 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புதிய முல்லை குறித்து புதிய தகவல் !
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் காவ்யா அறிவுமணி விலகவுள்ள நிலையில் அவருக்கு பதில் புதிய சீரியல் நடிகை ஒருவர் இணையவுள்ளார்.
சின்னத்திரையில் பெரிய வரவேற்பை பெற்று நீண்ட நாட்களாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் கதைக்களத்தை கொண்டு உருவாகி ஒளிப்பரப்பாகி வருகிறது.

விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட், காவியா, ஹேமா, சரவண விக்ரம், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். குறிப்பாக முல்லை கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
முதன்முதலில் இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் இறந்துவிட்டார். அவருக்கு பதில் 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வந்தார். சமீபத்தில் இவர் சீரியலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் புதிய முல்லை கதாபாத்திரத்தில் அபிநயா என்பவர் நடிக்கவுள்ளாராம். இவரை விரைவில் சீரியலில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

