'கிழக்கு வாசல்' சீரியல் ஹீரோவாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்.

photo

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புது சீரியல் ‘கிழக்கு வாசல்’.  இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

90’ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான தொடராக கடந்த 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான  தொடர் ‘கனா காணும் காலங்கள்’ அந்த தொடரில் நடித்து அறிமுகமானவர் வெங்கட் ரங்கநாதன். தொடர்ந்து  பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் சின்னத்திரையில் ஆண் பாவம், மாயா, புகுந்த வீடு, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே, ரோஜா, தமிழும் சரஸ்வதியும் போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஜீவா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்குகென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

photo

இந்த நிலையில் இவர் அதே சேனலில் ஒளிபரப்பாக உள்ளகிழக்கு வாசல்தொடரில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தொடரில் சீனியர் நடிகையான ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் எஸ். சந்திரசேகர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து  பூவே பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய சீரியல்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் நடிகை அஸ்வினி ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.‌ இதற்கு முன்னர் கதாநாயகனாக சஞ்சீவ் கமிட்டாகியிருந்தார், ஆனால் சிலபல காரணங்களால் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

Share this story