கர்ப்பமான நேரத்தில் தவறி விழும் ஐஸ்வர்யா.... ஐசியூவில் அனுமதி.. பணமில்லாமல் தவிக்கும் கண்ணன் !

pandian stores

கர்ப்பமான நேரத்தில் ஐஸ்வர்யா திடீரென தவறி விழுந்துவிட்டதால் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்படுகிறார். 

கூட்டுக்குடும்ப உறவுகள் குறித்து பேசும் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. நான்கு அண்ணன் தம்பிகளும், அவர்களது மனைவிகளும் இந்த சீரியலின் பிரதான கதாபாத்திரங்கள். இதில் இரண்டாவது தம்பியான ஜீவாவிற்கு வீட்டில் மரியாதை இல்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

pandian stores

அதே காரணத்தை கூறி கண்ணன் - ஐஸ்வர்யா தம்பதியும் அண்ணன் மூர்த்தியிடம் சண்டை போட்டுக்கொண்டு செல்கின்றனர். ஐஸ்வர்யாவிற்கு யாரும் இல்லாததால் அவரின் அம்மா வசித்த வீட்டிற்கு செல்கின்றனர்.‌ அங்கு எந்த பொருளும் இல்லாத நிலையில் தனது கிரேட் கார்டு மூலமாக அனைத்து பொருளையும் வாங்குகின்றனர்‌. இதனால் கண்ணன் கடனாளியாக மாறுகிறார். 

pandian stores

இப்படி கதைக்களம் விறுவிறுப்பாக செல்ல கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா, அம்மா எனக்கு யார் வளைகாப்பு நடத்துவார் என்று கூறி அழுகிறார். அப்போது அண்ணி தனம் உனக்கு வளைகாப்பு நடத்துவார் என்று கூறு சமாதானம் செய்கிறார். இதற்கிடையே டான்ஸ் ஆடி வீடியோ போடுவதாக கூறி ஐஸ்வர்யா கீழே விழுகிறார். இதனால் ஆபத்தான கட்டத்திற்கு செல்லும் ஐஸ்வர்யாவை கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கிறார். மருத்துவமனையில் முன்பணமாக 7500 பணம் கட்ட சொல்கிறார்கள். ஆனால் கார்டில் பணம் இல்லை என்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடையும் கண்ணன் தனது அண்ணன் மூர்த்தியிடம் சென்று உதவி கேட்பாரா என பரபரபப்பான கட்டத்தில் கதை நகர்கிறது. 

Share this story