சூழ்ச்சியால் மாட்டிக் கொள்ளும் கண்ணன்.. அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் !

லஞ்சப் புகாரில் கண்ணன் திடீரென மாட்டிக் கொள்வதால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. கூட்டுக் குடும்ப கதைக்களத்தில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன் மற்றும் தம்பிகளும், அவர்களது மனைவிகள் என ஒன்றாக இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றிய கதைக்களம் தான் இந்த சீரியல்.
கர்ப்பமான முல்லை திடீரென கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவரின் பிரார்த்தனையாலும் குழந்தை பிறக்கிறது. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக டாக்டர் அதிர்ச்சி செய்தி ஒன்றை கூறுகிறார். இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்க மீனாவிற்கு மட்டும் உண்மை தெரியும். உடனடியாக சிகிச்சை எடுக்கவேண்டும் என்ற சூழ்நிலை இருக்கையில் தனது கடமைகளை நிறைவேற்றி விட்டு சிகிச்சை எடுக்கலாம் என தனம் நினைக்கிறார்.
இதற்கிடையே தனது மனைவி ஐஸ்வர்யா வளைக்காப்பிற்கான கண்ணன், கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை அடைக்க முடியாததால் வங்கியில் லஞ்சம் வாங்குகிறார். இந்நிலையில் கண்ணனால் லஞ்சப் புகாரில் மாட்டிக் கொண்ட அதிகாரி, அவரை சூழ்ச்சி செய்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மாட்டி விடுகிறார். இதனால் கண்ணன் கைது செய்யப்படுகிறார். இந்த செய்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.