"அந்த கதாபாத்திரம் தனக்கு ஏற்றதாக இல்லை" - விலகிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை !

sai Gayathri

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை சாய் காயத்ரி திடீரென விலகியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்.  விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆயிரம் எபிசோடுகளை கடந்து செல்லும் இந்த சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. 

sai Gayathri

இந்த சீரியலில் அடுத்தடுத்து நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றன. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவிற்கு பிறகு இரண்டு பேர் மாற்றப்பட்டு விட்டனர். அந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

sai Gayathri

சீரியலில் இருந்த விலகியதற்கான காரணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் நான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகுகிறேன். இதற்கான காரணம், ஐஸ்வர்யா கதாபாத்திரம் தனக்கு ஏற்றதாக இல்லை. இனி சீரியலில் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் வருங்காலத்திற்கு ஏற்றாற்போல் சரியான பாதையை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே நான் விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது முடிவினை மதித்த விஜய் டிவிக்கு என நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். 

Share this story