“பாண்டியன் ஸ்டோர்ஸ்” வீட்டை விட்டு வெளியேறும் மற்றுமொரு நபர் –அடுத்தடுத்து நடக்கபோவது என்ன?

photo

எத்தனை சீரியல்கள் வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென  தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதேப்போல தொடர் சற்றும் சலிப்பில்லாமல் தொடர்ந்து பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

photo

ஏற்கனவே ஒற்றுமையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் பல பிரச்சனைகள் நடந்து ஜீவா-மீனா, கயல் மூவரும் ஜனாதனன் வீட்டிற்கு  சென்றுவிட்டனர். அடுத்து கண்ணன்- ஐஸ்வர்யா வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒட்டு மொத்த குடும்பமும் சிதறிய நிலையில் குடும்பத்தை  ஆறுதல் படுத்தும் ஒரு நல்ல நிகழ்வாக முல்லையில் வளைகாப்பு நடந்தது. வலைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு போக மறுத்து முல்லை, கதிர் உடனே இருப்பதாக கூறினார். அதனால் அவரது அம்மா அவருடன் வந்து தங்கியுள்ளார்.

photo

எல்லம் நன்றாக சென்ற சமயத்தில்  முல்லையில் அம்மா தனத்திடம் ‘ஒரே வீட்டில் இரண்டு கர்பிணிகள் இருக்க கூடாது’ என கூற.   தனமும் மூர்த்தியிடம் விஷயத்தை கூறுகிறார். இருவரும் தனத்தின் அம்மா வீட்டிற்கு சென்றுவிட முடிவெடுத்து முல்லை-கதிரிடம் வீட்டை விட்டு போகும் விஷயத்தை கூறுகின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத முல்லை தனது அம்மா பார்த்த வேலைதான் இது இருக்கும் என சிந்தித்து ‘என் மீது சத்தியம் அக்கா நீங்க வெளியில் போக கூடாது’ என லாக் செய்கிறார்.  அதுமட்டுமல்லாமல் அவரது அம்மாவையும் வீட்டை விட்டு வெளியில் போக சொல்கிறார் முல்லை. ‘எங்க அண்ணிய யாரும் எதுவும் சொல்லக்கூடாது’ என கதிரும் முல்லையின் அம்மாவை எச்சரிக்கிறார்.

photo

Share this story