மீண்டும் பிரிய போகிறதா ‘மூர்த்தி’யின் குடும்பம் – பரபரப்பான அடுத்த கட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.

photo

சீரியல் பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களுள் ஒன்று ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது. அதன்படி, மீண்டும் மூர்த்தியின் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது, அதற்கான வீடியோ வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

photo

தொடர்ந்து வீட்டில் பல அவமானங்களை சந்தித்து வந்த ஜீவா, தனது அண்ணணிடம் பொங்கி எழுந்துள்ளார். அதற்கு காரணம், மீனா குழந்தையுடன் நடு ரோட்டில் நிற்பதாக ஜீவாவிற்கு போன் செய்ய,  ஜீவாவும் கடையை பாதியில் மூடிவிட்டு சென்றுவிடுகிறார். அந்த சமயத்தில்  மூர்த்தி வர வாடிக்கையாளர்கள் வெளியில் நிற்பதை பார்த்து மூர்த்து ஜீவாவின் மீது கோபம் கொள்கிறார். வீட்டிற்கு வந்ததும் அவரது கோபத்தை ஜீவாவின் மீது காட்ட, பொறுத்தது போதும் என பொங்கி எழுந்து, மீனா நடு ரோட்டில் நின்றதால்தான் நான் சென்றேன் என கூறுகிறார்.

photo

அதற்கு மூர்த்தி ஆட்டோவில் ஏற்றி அனுப்ப  வேண்டியதுதானே என கூற, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜீவா “பணத்த குடுத்து வச்சமாதிரி ஆட்டோல போங்கன்னு சொல்றீங்க? கல்லா பெட்டிய ஏன் அண்ண பூட்டி வச்சீங்க? நான் மொத்த பணத்தையும் எடுத்துட்டு போய்டுவன்னு நெனச்சீங்களா?” என காட்டமாக தனது  மனதில் உள்ளதை வெளியில் கொட்டுகிறார்.  இந்த வீடியோ சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.

Share this story