உண்மையை அறியும் ‘முல்லை’ அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன – பரபரப்பான கட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.

ரசிகர்ளின் விருப்பமான தொடர்களுள் முக்கியமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் அதிரடி கதைகளத்துடன் ஒளிபரப்பாகிவருகிறது. ஜீவா, மீனா தம்பதி தனியாக பிரிந்துசென்றதில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அனைத்திலும் உச்சமாக தனத்திற்கு மார்பக புற்றுநோய் என்ற செய்தி பேரிடியாக உள்ளது.
குடும்பத்தின் சந்தோஷத்திற்காக இந்த விஷயத்தை தனம் மற்றும் மீனா இருவரும் ரகசியம் காத்து வருகின்றனர். அவர்கள் இருவரின் நடவடிக்கையால் சந்தேகம் கொள்ளும் முல்லை, மீனாவிடம் சென்று உண்மையை கூறும்படி கேட்கிறார். மீனாவும் ‘தனத்திற்கு மார்பக புற்றுநோய்” என்ற விஷயத்தை கூற அதிர்ந்துபோய் கதறி அழுகிறார் முல்லை. தொடர்ந்து முல்லை மூலமாக இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரியவருமா? அல்லது மீனாவை போல முல்லையையும் தனம் வாயடைக்க செய்வாரா? இந்த விஷயம் கதையை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.