கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீவா, கதிர் – இனி நடக்கப்போவது என்ன?

photo

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து தற்போது மூர்த்தி குடும்பம் ஒன்றுமையாக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள் என மகிழ்ச்சியடைவதற்குள் மீண்டும் ஒரு புது பூகம்பம் பிரஷாந்த் என்ற பெயரில் வந்துள்ளது.

photo

இந்த தொடர் விரைவில் முடிய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தற்போது அடுத்தடுத்த எப்பிசோடுகள் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது  பிரஷாந்திடம் தான் ஏமார்ந்துள்ளதை அறிந்த ஜனார்தனன் அவரிடம் பணத்தை திரும்ப கேட்கிறார். அதை தர மறுத்து சண்டைக்கு செல்கிறார் பிரஷாந்த், அப்போது தடுக்க வந்த மேனேஜரை கீழே தள்ளிவிட அவரது தலை கல்லில் பட்டு ரத்தம் வழிகிறது. இதனால் ஆத்திரம் கொள்ளும் ஜனார்தனன் பிரஷாந்தை வெட்ட முற்படுகிறார். உடனே பிரஷாந்த கத்தியால் ஜனாவை குத்திவிட்டு தன்னையும் காயப்படுத்திக்கொண்டு ஜீவாதான் இவை அனைத்தையும் செய்ததாக போலீஸிடம் கூறுகிறார். இதனால் அவர்கள் ஜீவா, கதிர் இருவரையும் கைது செய்கின்றனர். தொடர்ந்து ஜனார்தனன் மீண்டு வந்து உண்மையை கூறுவாரா?  என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story