பிரசாந்தின் சூழ்ச்சியில் சிக்கி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டை விட்டு வெளியேறும் மீனா.

photo

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் அதிக ரசிகர்களை பெற்ற ஒரு தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ . இந்த தொடர் அண்ணன், தம்பிகளின் ஒற்றுமையை முன்னிறுத்தி ஒளிபரப்பாகி வருகிறது.

photo

பல கஷ்டங்களுக்கு பிறகு மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என அனைவரது குடும்பமும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரசாந்த், ஜனார்தனன் இடையே ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக பிரசாந்த், ஜனார்தனனை கத்தியால் குத்தி தன்னையும் காயப்படுத்திக்கொண்டு; இவற்றையெல்லாம் செய்தது மீனாவின் கணவர் ஜீவா என போலீசில் பொய் சாட்சி கூறுகிறார். இதனை கேட்ட மீனா ஆத்திரத்தில் வீட்டிற்கு வந்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு கயலையும் கூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு புறப்படுகிறார்.

அனைவரும் எவ்வளவு தடுத்தும் மீனா கேட்பதாக இல்லை. ‘இந்த வீட்டுல நீங்க மட்டும் சந்தோஷமா இருங்க, நான் போறேன்’ கயலை மீனா தூக்கி சென்றது வீட்டில் உள்ள அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story