பரபரப்பான கட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – விபத்தில் சிக்கிய அந்த நபர், கதையில் நடக்க போகும் மாற்றம் என்ன?

குடும்ப ஒற்றுமையை பின்னணியாக கொண்டு நான்கு அண்ணன் தம்பிகளையும், அவர்களது குடும்பத்தையும் மைய்யமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ . இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறு கதைகளத்தில் இயங்கும் இந்த தொடரில் அண்ணன் தம்பி ஒற்றுமையில் விரிசல் வர துவங்கியுள்ளது, அதுமட்டுமல்லாமல் எதிர்பாராத சில மாற்றங்களும் நிகழ உள்ளது.
அதன்படி மூர்த்தி குடும்பத்தில் தனம், முல்லை, ஐஸ்வர்யா என அனைவரும் அடுத்துடுத்து கர்பமாக இருப்பதால் வீட்டின் வேலைகளை கவனிக்கும் பொறுப்பு மீனா வசம் வருகிறது. அதேபோல, கடைபொறுப்பு ஜீவா வசம் வருகிறது. இருவரும் தங்களுக்காக நேரம் செலவிடமுடியவில்லை என புலம்பும் சமயத்தில் தான் ஜீவாவை சீண்டும் விதமாக ஒரு சம்பவம் வீட்டில் நடக்கிறது.
கண்ணன் தனது மாத ஊதியத்தை வீட்டில் தருகிறார், தொடர்ந்து கதிரும் தனது ஓட்டல் லாபத்தை தருகிறார். ஆனால் ஜீவா வசம் ஒன்றும் இல்லாததால் அவரை கேலி செய்யும் விதத்தில் கண்ணன் கூற, மனம் நொந்து விடுகிறார் ஜீவா. இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் மீனா தந்தை ஜனாதனனிற்கு விபத்து நடந்துவிடுகிறது. இதனால் மீனாவின் தங்கை திருமணத்தை ஏற்று நடத்தும் பொறுப்பு ஜீவாவிற்கு வருகிறது. இதனை காரணம் காட்டி ஜனாவின் எண்ணமான மீனா மற்றும் ஜீவாவை தனது பக்கம் இழுத்துக் கொள்ளும் முயற்சி வெற்றி பெருமா? தோல்வி அடையுமா? என்பதை பொறுத்திருந்து காணலாம்.