பாண்டியன் ஸ்டோர்ஸ்: தனத்தின் புற்று நோய் குறித்து அறியும் ஒட்டு மொத்த குடும்பம்- இனி நிகழப்போவது என்ன?

photo

 கூட்டு குடும்பத்தை மைய்யமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்களுக்கு விருப்பமான இந்த தொடரில் முக்கிய திருப்பமாக ஐஸ்வர்யா செய்த செயலால் தனத்தின் புற்றுநோய் குறித்து குடும்பத்திற்கு தெரியவருகிறது.

photo

அதாவது வழக்கம்போல யாருடைய பேச்சையும் கேட்காமல் ஐஸ்வர்யா தனது யூடியூப் சேனலுக்காக வீடியோபதிவு செய்கிறார். அதுவும் புற்றுநோய் என்ற தலைப்பில், அது குறித்து பேசும் போது ‘ கேன்சர் எவ்வளவு கொடுமையான நோய், அந்த நோயால பாதிக்கப்பட்டவங்க எங்க வீட்டுலையும் இருக்காங்க பிரண்ட்ஸ்’ என ஐஸ்வர்யா வீடியோ பதிவு செய்து யூடியூபில் வெளியிட, மீனா குடும்பத்தார், முல்லை குடும்பத்தார், மூர்த்தி என அனைவரும் பதறிபோய் வீட்டிற்கு வந்து ஐஸ்வர்யாவிடம் இது குறித்து விசாரிக்கின்றனர்.

photo

அப்போதுதான் உண்மையை அனைவரிடமும் கூறுகிறார். இதனை அறிந்த ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளானர். தொடர்ந்து மூர்த்தி என்ன முடிவு எடுக்கப்போகிறார். இது நாள் வரை உண்மைகளை மறைத்ததற்கு எம்மாதிரியான ரியாக்ட் செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story