சின்னத்திரையில் ரீஎண்ட்ரி கொடுக்க தயாரான ‘பெப்சி உமா’ – அவரே சொன்ன வேற லெவல் அப்டேட்.

photo

‘பெப்சி  உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் உமா. அந்த நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து பெப்சி உமாவாக வலம்வர தொடங்கினார். குறிப்பாக அவர் அணிந்து வரும் புடவை, நகைகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படி 90’ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான தொகுப்பாளரான உமா தற்போது ரசிகர்களுக்கு குட்நியூஸ் கூறியுள்ளார்.

photo

சுமார் 15 ஆண்டுகள் உமா நிகழ்சியை தொகுத்து வழங்கினார். வெள்ளித்திரை வாய்ப்புகள் பல வந்தாலும் அதையெல்லாம் நிராகரித்து சின்னத்திரையிலே நீடித்தார். உமா தனது முதல் நிகழ்ச்சி தொகுப்பை அவரது பிளஸ்டூ படிக்கும்போது தூர்தர்ஷனில் மூலமாக தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

தொடர்ந்து பல வருடங்களாக சின்னத்திரையை விட்டு விலகியிருந்த உமா. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விரைவில் சின்னத்திரையில் சந்திப்போம் என கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Share this story