ப்ளீஸ் என்ன பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே அனுப்புங்க.. கதறும் பிரியங்கா !

bigboss season 5


புதிய டாஸ்க்கில் பிரியங்காவுடன் நிரூப் சண்டைப்போடும்  காட்சிகள் வெளியாகியுள்ளன.  

bigboss season 5

பிக்பாஸ் வீட்டில் ப்ரேக்கிங் நியூஸ் என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அப்போது ப்ளு டிவி அணியில் இருக்கும் ப்ரியங்கா மற்றும் நிரூப் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அது குறித்த ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது. அதில், புதிய லாஸ்க்கில் என்னை இஷ்டத்திற்கு கலாய்த்திட்டு இருந்தீங்க. நான் வேண்டாம்னு சொல்லியும் உன்ன நான் அப்படிதான் கலாய்ப்பேன் என்று சொல்லி கலாய்ச்சிங்க, அது எதற்கு ? என்று நிரூப், கோவமாக பிரியங்காவை பார்த்து கேட்கிறார்.

bigboss season 5

உன்னை கலாய்த்ததில் ஏதேனும் பிரச்சனைனா என்கிட்டு வந்து பேசு. அதைவிட்டு பிரியங்காவிடம் எதற்கு சண்டை போடுகிறார் என்று அபிஷேக் கேட்கிறார். உனக்கு அப்படி பிரச்சினை என்றால் அதை சொல்லவேண்டியதுதானே  அதை விட்டுவிட்டு எதற்கு இப்படி பேசுகிறாய் என்று பிரியங்கா கேட்க, அதற்கு நான் சொன்னேன் நீங்க யாரும் கேட்கவில்லை என்றார் நிரூப். உடனே டென்ஷனான பிரியங்கா, ப்ளீஸ் பிக்பாஸ் இதை நீங்க பார்த்துகிட்டு இருங்கீங்க என்று நம்புகிறேன். 

bigboss season 5

அதனால் சிபி படுக்கையில் ப்ளு டிவி அணியினர் பேசிக்கிட்டு இருந்ததை குறும்படமாக போடுங்க. அதில் என்மேல் தப்பு இருந்தால் என்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்புங்க. நான் உடனே கிளம்புகிறேன் என்று ஆவேசமாக பிரியங்கா கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய எபிசோடு களைக்கட்டும் என்றே தெரிகிறது. 

Share this story