சண்முகத்துக்கு விஷ ஊசி.. மரண பயத்தை காட்டிய பரணி - அண்ணா சீரியல்

சண்முகத்துக்கு விஷ ஊசி.. மரண பயத்தை காட்டிய பரணி  - அண்ணா சீரியல் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் அண்ணா. பரணி எல்லோரிடமும் சண்டை போட்டு சண்முகத்திடம் இன்னைக்கு நைட்டு உனக்கு விஷ ஊசி போட்டு கொல்ல போறேன் என்று சொல்ல சண்முகம் பயத்துடன் படுக்க செல்கிறான். சண்முகம் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவனுக்கு பரணி ஊசி போடுவது போல தோன்ற அலறி எழுந்து கொள்ள பிறகு அது கனவு என தெரிய வருகிறது. ஊசி போட்டு கொண்டாலும் கொன்னுடுவார் என்ற பயத்தோடு சண்முகம் தூங்காமல் இருக்க விடியற்காலையில் அசந்து தூங்குகிறார். பிறகு காலையில், பரணி வீட்டின் முன்பு கோலம் போட்டு இன்னும் 40 நாளில் இங்கிருந்து ரிலீஸ் ஆகி விடுவேன் என்று எழுதி இருக்க அதை பார்த்ததும் வைகுண்டத்துடன் சண்டை போடுகிறார். 

சண்முகத்துக்கு விஷ ஊசி.. மரண பயத்தை காட்டிய பரணி  - அண்ணா சீரியல் 

அடுத்ததாக சௌந்தரபாண்டி ஊர் பெரியவர்களை சந்தித்து சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போறது இல்லை என்று சொல்ல அங்கு வரும் வைகுண்டம் யார் அப்படி சொன்னது சண்முகம் தேர்தில் நிற்பார் என தெரிவிக்கிறார். அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அண்ணா தொடரில் காணலாம். 
 

Share this story