‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை... திடீர் விலகலுக்கு காரணம் என்ன ?

baakiyalakshmi
‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளார். 

தமிழ் சின்னத்திரை பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ரித்திகா. 'ராஜா ராணி' சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலின் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வருகிறார்.  

baakiyalakshmi

அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாக்யாவின் ஒவ்வொரு செயலுக்கும் உறுதிதுணையாக ரத்திகாவின் கதாபாத்திரம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ரித்திகா விலகுவதாக அறிவித்துள்ளார். ரித்திகாவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

baakiyalakshmi

நடிகை ரித்திகா விலகியுள்ளதால் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரித்திகா கதாபாத்திரத்தில் நடிகை அக்சிதா அசோக் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Share this story