டயட்டால் வந்த விபரீதம்.. சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவிக்கு நேர்ந்த சோகம்..

டயட்டால் வந்த விபரீதம்.. சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவிக்கு நேர்ந்த சோகம்..


பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின்  மனைவி உடல் நலக்குறைவால் காலமானார்.
 
தமிழ் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்  நடிகர் பரத் கல்யாண்.   இவர் பிரபல பழம்பெரும் நடிகர்  கல்யாண் குமாரின் மகன்  ஆவார். பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டு கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.   யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் பரத் கல்யாண்  நடித்துள்ளார்.

டயட்டால் வந்த விபரீதம்.. சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவிக்கு நேர்ந்த சோகம்..  
சொந்தம், கஸ்தூரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள பரத் , 90களில் மிகப் பிரபலம்.   தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள்  2 வெப் சீரிஸிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா, சன் டிவியில் இலக்கியா ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் பரத் கல்யாண் மனைவி பிரியதர்ஷினி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டயட்டால் வந்த விபரீதம்.. சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவிக்கு நேர்ந்த சோகம்..

43 வயதே ஆகும்  பிரியதர்ஷினி பேலியோ டயட்  மேற்கொண்டதால் சர்க்கரை வியாதி வந்துள்ளது. இதற்காக 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கொஞ்சம் நாள் கோமாவில் இருந்துள்ளார்.  இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அவர் இயற்கை எய்தியுள்ளார்.   பரத் கல்யாண் மனைவி மறைந்த நிலையில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.  நாளை காலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story