ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்- அதிரடி காட்டிய கமல்.

photo

பிக்பாஸ் சீசன்7 அதிரடி சரவெடியாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போதைய தகவலாக பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

photo

முதல் வாரத்தில் அனன்யா, தொடர்ந்து பவா செல்லதுரை, விஜய் வர்மா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது அதில் விணுஷா, யுகேந்திரன் வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், விஜே அர்ச்சனா, ஆர்ஜே பிரேவோ, அன்ன பாரதி மற்றும் கானா பாலா ஆகியோரை வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறங்கினார்கள். பிக்பாஸ் டீம் நினைத்தது போலவே ஆட்டம் கலைகட்டியது. இந்த நிலையில் பிரதீப் தகாதவார்த்தைகளால் சக போட்டியாளரை திட்டிய வழக்கில் அனைவரும் அவருக்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கும் புரொமோ வெளியானது. இந்த நிலையில்  அவர் போட்டியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.  தொடர்ந்து இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதற்காக அன்னபாரதி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share this story