18 ஆண்டுகளுக்கு பின் முன்னணி சீரியல் மூலம் கம்பேக் கொடுக்கும் 'பிரஹர்ஷேதா'.

photo

கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான திரைப்படம் ‘சந்திரமுகி’. இந்த படத்தில் நாசர், வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா, பிரபு என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிரஹர்ஷேதா. தொடர்ந்து வேலன் மற்றும் ராஜ ராஜேஸ்வரி  உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு  திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

photo

இந்த நிலையில் தற்போதைய தகவலாக பிரஹர்ஷேதா மீண்டும் 18ஆண்டுகள் கழித்து முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி சீரியல் ஒன்றில் இணையபோவதாக தகவல் வெளியானது. அந்த தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும் ‘எதிர்நீச்சல்’ தொடரக இருக்கலாம் என்றும் அதில் லாயராக எண்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவை எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து காணலாம்.

Share this story