ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவின் அம்மன் அவதாரம்.

photo

சின்னத்திரை பிரபலத்தை வைத்துக்கொண்டு வெள்ளித்திரையில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். ரோபோ ஷங்கர் போலவே அவரது மனைவி பிரியங்கா ஷங்கரும் சின்னத்திரை நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் பிரியங்கா வாராகி அம்மனாகவே மாறியுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் பகிரபபட்டு வருகிறது.

அச்சு அசல் அம்மனை போலவே மேக்கப் போடும் பிரியங்காவின் வீடியோவை பலரும் விரும்பி பார்க்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகனத்தின் மீது வாராகி அம்மன் வீற்றிருக்க. அவருக்கு தீபாராதனை காட்டி, வழிபாடு நடத்தியுள்ளனர். அந்த வீடியோவின் பின்னணியில்  ‘காந்தாரா’ படத்தின் வராக ரூபம் பாடல் ஒலிக்கிறது. அருகில் ரோபோ ஷங்கர் மற்றும் அவரது மகள் இந்துஜா உள்ளனர். இதனை பார்த்த பலருமே அம்மனாகவே மாறியுள்ள பிரியங்காவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து காணப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Share this story