இந்த வாரம் வெளியேறியது இவரா ?.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

rachitha

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டடத்தை எட்டியுள்ளது. தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன் கோல்டன் டிக்கெட் பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக சென்றுவிட்டார். அதனால் மீதமிருக்கும் 6 பேரும் கடுமையாக போராடி வருகின்றனர். 

rachitha

இந்த நிகழ்ச்சியின் விதிப்படி போட்டியாளர்களாக இருக்கும் 7 பேரில் ஒருவர் இந்த வாரமும், அடுத்த வாரம் இரண்டு பேரும் வெளியேற்றப்படுவர். அதனால் இந்த வாரம் வெளியேறுவது யார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அதேநேரம் இந்த போட்டியாளர் யார் என்பதை கூறுவதில் பல ட்விஸ்டுகள் கொடுத்தார். 

கடைசியாக ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரச்சிதா எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். அவர் மிக குறைந்த வாக்குகள் பெற்றதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு நாள் ஒன்றிற்கு 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story