புதிய சீரியலில் ‘ராஜாராணி 2’ ரியா... டைட்டில் என்ன தெரியுமா ?

riya

 சீரியல் நடிகை ரியா நடிக்கும் புதிய சீரியல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்ந்த சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது ‘ராஜா ராணி 2’. கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் பெண் போலீஸ் உயரதிகாரியாகி எப்படி நேர்மையாக பணியாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்தில் இயக்குனர் காட்டி வருகிறார். அதனால் இந்த சீரியல் மிகவும் சுவாரஸ்சியமாக சென்றுக் கொண்டிருக்கிறது. 

riya

இந்த சீரியல் இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் ஆல்யா மானசாவும், சரவணன் கேரக்டரில் சித்துவும் முதலில் நடித்து வந்தனர். ஆனால் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் ஆலியா மானசா, கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார்.  அதனால் அவருக்கு பதிலாக சென்னை மாடல் அழகியான நடிகை ரியா, புதிய சந்தியாவாக நடித்து வந்தார்.

துணிச்சல் மிக்க ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் ரியா நடித்து மிரட்டி வந்தார். கடந்த ஒரு வருடமாக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்த ரியா, அதிரடியாக சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய சீரியல் ரியா தோன்றவுள்ளார். சூப்பர் ஹிட் சினிமா படமான ‘சண்டக்கோழி’ என்ற பெயரில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story