உருவக்கேலி செய்பவர்களுக்கு தொகுப்பாளர் 'ரம்யா'வின் பளார்……. வீடியோ.

photo

விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக நமக்கு அறிமுகமானவர் ரம்யா. இவர் பல நட்சத்திர பிரபலங்களை  நேர்காணல் செய்துள்ளார்.  அதுமட்டுமலாமல் பல மேடை  நிகழ்ச்சிகள், விருது விழாக்களை ஹோஸ்ட் செய்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டு பல உடற்பயிற்சி வீடியோக்கள், டயட் பிளான் உள்ளிட்டவற்றை தனது வீடியோ மூலமாக பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உருவகேலி செய்வபர்களுக்கு பதிலடி கொடுக்கு விதமாக சில விஷயங்களை பதிவு செய்துள்ளார். அதற்கு பலரும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது “ பெண்கள், ஆண்களின் உருவங்கள் குறித்து விமர்சிப்பது, குறிப்பாக பெண்களின் மார்பகம் பெரிதாக இருக்கு, சிறிதாக இருக்கு என கிண்டலடிக்கும் நபர் நீங்களாக இருந்தால், நீங்கள் வாழும் முறையை மாற்ற வேண்டும். நீங்க மட்டும் சிரித்தால் அது ஜோக் இல்லை, அது உங்கள் வேலையும் இல்லை. இதுபோன்று கோலிசெய்யும் நபர் அவரது உடல் குறித்து தாழ்வுமனப்பான்மை கொண்டவராக இருப்பார். அதிஷ்டவசமாக  நான் அப்படியான நிலையில் இல்லை. நீங்களும் அப்படி இருக்காதீர்கள்.” என சூப்பராக வீடியோ மூலமாக பதிவு செய்துள்ளார்.

Share this story