எனக்கு உன்ன பதம் பாக்கனும்?... விவகாரமான கேள்விக்கு சர்ச்சை பதில் கொடுத்த 'ரேஷ்மா பசுபுலேட்டி'.

photo

பிரபல நடியகையான ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் நடந்த பேன்ஸ் மீட்அப்பில் விவகாரமான கேள்விக்கு வில்லங்கமான பதில் சொல்லி சர்சையில் சிக்கியுள்ளார்.

photo

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன்’ படத்தில் இடம் பெற்ற ‘புஷ்பா புருஷன்’ காமெடி மூலமாக ரசிகர்கள்  மத்தியில் அறியப்பட்டவர் ரேஷ்மா பசுபுலேட்டி. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சில சீரியலகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ராதிகா கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் ‘பாக்கிய லெட்சுமி’ சீரியல் மக்கள் மத்தியில் மிக பிரபலம். அதில் இவரின் வில்லித்தனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

photo

இந்த நிலையில் ரேஷ்மா சமீபத்தில் தனது பேன்ஸ் உடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பல கேள்விகள், மற்றும் சர்ச்சை கமெண்ட் குறித்து  பதிலளித்து பேசினார். அப்போது  ஒருவர் ‘எனக்கு உன்ன பதம் பாக்கனும்’ என மிக மோசமான கமெண்ட் செய்ததற்கு கூலாக பதிலளித்துள்ளார் ரேஷ் அதாவது,  ‘அதெல்லாம்  நடக்காது’ என கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் ‘எனக்கு கூட தான் ரன்பீர் கபூரை பதம் பார்க்கனும், அதை பண்ண முடியுமா, ஆலியா பட் என்னை செருப்பால அடிக்க மாட்டா, பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க, நாம நம்ம வேலைய பார்த்துட்டு போய்கிட்டே இருக்கனும்’ என கூற. இந்த விஷயம் தற்போது சர்சையை கிளப்பியுள்ளது.

Share this story