பாக்கிய லெட்சுமி ரித்விகாவுக்கு கல்யாணம்!....மாப்பிள்ளையும் விஜய் டிவி நபர்தான்.

photo

பாக்கிய லெட்சுமி ரித்விகாவுக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிய லெட்சுமி சீரியலில் அம்ரிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி, போன்ற பல ரியலிட்டி ஷோக்களில் கலந்துக்கொண்டு ரசிகர்களை எண்டர்டைன் செய்துள்ளார். அந்த வகையில் தற்போதைய தகவல் படி ரித்விக்காவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதுவும் விஜய் டிவியில் பணிபுரியும் ஒரு நபர் தான், அந்த மாப்பிள்ளை யார் என்றால் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டர் ஆக இருக்கும் வினு என்பவர் தான். இவர்களது  திருமண வரவேற்பு வரும் நவம்பர் 27ம் தேதி  மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக  குடும்பத்தினர் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

photo

 இந்த தகவலைத்  தொடர்ந்து ரசிகர்கள் பலருமே ரித்துவின் இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share this story