ரெசார்ட்டில் நடக்கும் ரொமான்ஸ்.. கார்த்திக், தீபாவை கலாய்த்த மீனாட்சி...

ரெசார்ட்டில் நடக்கும் ரொமான்ஸ்.. கார்த்திக், தீபாவை கலாய்த்த மீனாட்சி...

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். அத்தொடரில், மீனாட்சி தீபாவிடம் வந்து ரிசார்ட் வந்து இருக்கோம். இன்னைக்கு உனக்கும் கார்த்திக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடத்திட வேண்டியதுதான் என்று சொல்ல தீபா போங்க அக்கா என்று வெட்கப்படுகிறார். அடுத்ததாக கார்த்திக் மற்றும் தீபா ரூமில் ரெசார்ட் நல்லா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க பிறகு தீபா பாத்ரூமுக்குள் செல்ல தெரியாமல் சுவரை ஆன் செய்துவிட தண்ணீர் மொத்தமும் மேலே கொட்டுகிறது. பிறகு உதவிக்கு வரும் கார்த்திக் ஷவரை ஆப் செய்து வெளியே அழைத்து வருகிறார். பிறகு தீபாவின் துணியை எடுத்து வரும் மீனாட்சி தீபா கார்த்திக் ட்ரஸ் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து என்ன கார்த்திக் எல்லாம் நல்லபடியா முடிந்ததா என்று கேட்க அவனும் முடிந்தது என்று பதில் சொல்கிறார்.

ரெசார்ட்டில் நடக்கும் ரொமான்ஸ்.. கார்த்திக், தீபாவை கலாய்த்த மீனாட்சி...

பிறகு தீபா அவங்க என்ன கேக்குறாங்க நீங்க என்ன பதில் சொல்றீங்க என்று கேட்க அங்கு என்ன கேட்டாங்கன்னு எனக்கு தெரியும் அப்படியே இருந்துட்டு போகட்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  காணலாம்.
 

Share this story