இந்த டிவி இல்லனா, அந்த டிவி…….ரோஷிணி ஹரிப்ரியனின் புது சீரியல், யாரு ஹீரோ, எந்த தொலைக்காட்சி தெரியுமா?

serial

விஜய் டிவியின்பாரதி கண்ணம்மாசீரியல் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் ரோஷிணி ஹரிப்ரியன்.முதல் சீரியலே இவருக்கு மிகபெரிய புகழை பெற்று தந்தது. சீரியல் பரபரப்பாக சென்ற சமயத்தில் திடீரென சீரியலில் இருந்து வெளியேறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.

photo

அவருக்கு  திரைப்பட வாய்ப்பு கிடைத்ததால் தான் சீரியலில் இருந்து விலகினார் என அப்போது பேச்சு அடிப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் எந்த படத்திலும் நடித்ததாக தெரியவில்லை.

தொடர்ந்து ரோஷிணி வேறு ஒரு சீரியல் நடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் விஜய் டிவியில் வெளியானகுக் வித் கோமாளிநிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் தற்பொழுது ரோஷிணி விஜய் டிவியிலிருந்து , ஜீ தமிழிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜீ தமிழில் புதிய சீரியலில் நடிக்க போவதாகவும், அந்த தொடரில் ஹீரோவாகசெம்பருத்திபுகழ் கார்த்திக் ராஜ் நடிக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

photo

விரைவில் சீரியல் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வரும் என எதிபார்க்கப்படுகிறது.

Share this story