‘சண்டக்கோழி’யாக மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ரியா – வெளியான புதிய புரொமோ.

photo

விஜய்டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை ரியா விஸ்வநாதன் தற்போது ‘சண்டகோழி’ எனும் புதிய தொடரில் இணைந்துள்ளார். இது தொடர்பான பிரோமோ வெளியாகியுள்ளது.

photo

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் சந்தியா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரியா. பல ஸ்டண்ட் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகளில் நடித்து பலரையு அசரவைத்தார். தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். காரணமாக கால்ஷீட் விவகாரத்தை கூறினார். இந்த நிலையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சண்டக்கோழி தொடரில் அறிமுகமாகவுள்ளார். அதற்கான புரோமோ வெளியாகியுள்ளது.

இந்த சீரியல் குறித்து சண்டக்கோழி நடிகை ரியா விஸ்வநாதன் பேசுகையில், “நியாஸ் சார் போன்ற மிகப்பெரிய நட்சத்திரத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். டிவி சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது. நிச்சயமாக, இந்த தொடர் அனைத்து பார்வையாளர்களையும் மகிழ்விக்கும். இந்த சீரியலின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது" என்றார். இத் தொடர் வரும் மே 8ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this story