நீண்ட இடைவெளிக்கு சின்னத்திரையில் ரிஷி... பிரபல டிவி சீரியலில் ரீ என்ட்ரி !
பிரபல சீரியல் நடிகர் ரிஷி, நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரிஷி. சன் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதில் டீலா நோ டீலா, கையில் ஒரு கோடி - ஆர் யூ ரெடி ?, சூப்பர் சேலஞ்ச் உள்ளிட்டவைகள் அடங்கும். இந்த நிகழ்ச்சிகள் மூலமே ரிஷிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சினிமா, சீரியல், தொகுப்பாளர் என பல களங்களில் பணியாற்றி வந்தார். தமிழை தாண்டி தெலுங்கு சீரியல் சிலவற்றிலும் பணியாற்றியுள்ளார். ஆனந்த தாண்டவம், பயணம் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

வாய்ப்பு இல்லாததால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் ரிஷி ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் தற்போது சேதுபதி என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிஷி மீண்டும் சீரியலில் நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

