சிறையிலிருந்து வெளியே வரும் அர்னவ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

arnav

சீரியல் நடிகர் அர்னவ்வுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால் விரைவில் வெளியே வரவுள்ளார். 

பிரபல சீரியல் நடிகராக இருக்கும் அர்னவ், கடந்த மாதம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நபராக இருந்தார். இதற்கு காரணம்  தனது கர்ப்பிணி மனைவியான சீரியல் நடிகை திவ்யாவை அடித்து உதைத்தும், கொலை முயற்சி செய்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

arnav 

இந்த புகார் குறித்து விசாரித்து வந்த போலீசார் அர்னவ்வை படப்பிடிப்பு தளத்திலேயே கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த அர்னவ் மீது பல பெண்கள் புகார் அளித்தனர். இதனால் இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்தது. 

தற்போது சிறையில் இருக்கும் அர்னவ், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அர்னவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை குடும்ப வழக்காக பார்க்கவேண்டும் என்றும், குற்ற வழக்காக பார்க்கக்கூடாது என்றும் வாதிட்டார். இதையடுத்து அர்னவ்வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனால் நாளை அர்னவ் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது.

Share this story