‘கயலை சுட்டாங்களா’... வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !

chaitra reddy

 ‘கயல்’ சீரியலில் நடித்து வரும் சைத்ராவை சுட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.  

சன் டிவி சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இல்லத்தரசிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் சீரியல் ‘கயல்’. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இந்த சீரியல் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. 

chaitra reddy

இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி, தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதற்கு காரணம் அந்த வீடியோவில் சைத்ராவை சுடுவது போன்று காட்சி உள்ளது. இந்த காட்சிகள் ‘கயல்’ சீரியலுக்கான எடுக்கப்பட்டவை. அதை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா ரெட்டி வெளியிட்டுள்ளார். 

வரும் வாரம் ஒளிப்பரப்பாக உள்ள எபிசோடில் கயல் கதாபாத்திரத்தில் நடிக்கும் சைத்ரா ரெட்டி சுடுவது போன்று காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. டம்மி துப்பாக்கி மூலம் கயலை சூடும் அந்த காட்சி ரியலாக இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் எப்படி நடிக்கிறீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

 

 

Share this story