விஜய்டிவி சீரியல் நடிகையின் திருமண கிளிக் வைரல்.
1693133893278
சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலானவர் ஜனனி. இவர் பிரபல யூடியூபரும் சீரியல் நடிகருமான இனியனை திருமணம் செய்துகொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சன்டிவியில் ‘கண்மணி’, விஜய் டிவியில் ‘சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் ஜனனி பிரதீப். இவர் ‘வித்யா நம்பர் ஒன்’ சீரியல் நடிகரும் யூடியூபருமான இனியனை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இவர்கள் திருமணம் நடந்துள்ளது. அதற்கான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் சின்னத்திரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.



