கிளாமர் லுக்கில் ரச்சிதா மகாலட்சுமி... வைரல் புகைப்படங்கள் !

பிரபல நடிகையான ரச்சிதா மகாலட்சுமி மீண்டும் கம்பேக் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரச்சிதா மகாலட்சுமி. 'பிரிவோம் சந்திப்போம்' என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதன்பிறகு 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார்.
பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'சொல்ல மறந்த கதை' சீரியலில் கதாநாயகியாக நடித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான 'புதுபுது அர்த்தங்கள்' சீரியலில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சினிமாவில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் நீண்ட நாட்களாக திரையில் வராமல் இருந்த அவர் மீண்டும் புதிய சீரியலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.