முதலில் ‘எதிர் நீச்சல்’ வாய்ப்பை மறுத்தேன் - நடிகை சத்யா

Edhirneechal

 ‘எதிர் நீச்சல்’ வாய்ப்பை முதலில் நான் மறுத்தேன் என்று நடிகை சத்யா தேவராஜன் தெரிவித்துள்ளார். 

 சன் டிவியில் டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் ‘எதிர் நீச்சல்’. கூட்டு குடும்ப வாழ்க்கை மையமாக வைத்து இந்த சீரியலில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்கம் நிறைந்த ஆண்களும், அவர்களால் இன்னலுக்கு ஆளாகும் அவரது மனைவிகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் இந்த சீரியலின் ஹிட்டிற்கு காரணம். 

Edhirneechal

சமீபத்தில் வெளியான எபிசோடுகளில் ஆதிரை - கரிகாலன் திருமணம் டிராக் சீரியலை டாப் டிஆர்பிக்கு கொண்டு சென்றது. தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் சத்யா தேவராஜன் நடித்து வருகிறார். பல சீரியல்களில் நடித்துள்ள சத்யா, இந்த சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார். 

Edhirneechal

இந்நிலையில் நடிகை சத்யா தேவராஜன், எதிர் நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முதலில் எதிர்நீச்சல் சீரியல் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்தேன். அதன்பிறகு கதை கேட்ட பிறகு ஒப்புக் கொண்டேன். எதிர் நீச்சல் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருந்தால் என்னை விட பெரிய முட்டாள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். 

 

Share this story