படுக்கைக்கு அழைத்த நபர். தக்க பதிலடி கொடுத்த சின்னத்திரை நடிகை!

படுக்கைக்கு அழைத்த நபர். தக்க பதிலடி கொடுத்த சின்னத்திரை நடிகை!

தன்னை படுக்கைக்கு அழைத்த நபருக்கு பிரபல நடிகை ஒருவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு சமீபகாலமாக பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. அதிலும் குறிப்பாக இணைய வழியில்தான் சில கொடூர எண்ணம் கொண்ட நபர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத்துக்கு இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் இணையம் வாயிலாக நடைபெற்றது. அதை தைரியமாக வெளியுலகிற்கு கொண்டு வந்திருந்தார் அனிதா.

படுக்கைக்கு அழைத்த நபர். தக்க பதிலடி கொடுத்த சின்னத்திரை நடிகை!

இதேபோன்றொரு நிலை மீண்டும் ஒரு நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சவுந்தர்யா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ‘பகல் நிலவு’ என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரேவதி என்ற முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இதேபோன்று விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

படுக்கைக்கு அழைத்த நபர். தக்க பதிலடி கொடுத்த சின்னத்திரை நடிகை!

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சவுந்தயா, தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில், நபர் ஒருவர் சவுந்தர்யாவுக்கு, மிகவும் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதனை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், தனது சக பயனாளர்களை எச்சரித்துள்ளார். மேலும் அந்த நபரை உடனடியாக பிளாக் செய்துள்ளார்.

Share this story