சீரியலே வேண்டாம்... அதிரடி முடிவு எடுத்த ‘தொன்றல் வந்து என்னை தொடும்’ நடிகர் !
‘தொன்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் இருந்து நடிகர் வினோத் பாபு விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக இருப்பவர் வினோத் பாபு. கடந்த 2018-ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான ‘சிவகாமி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சில ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகக்ளை கவர்ந்தார். பின்னர் ‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகனாக தோன்றினார்.

இதையடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார். மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் அந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒராண்டை கடந்து ஒளிப்பரப்பாகி வரும் அந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சீரியலே வேண்டாம் என்று நடிகர் வினோத் பாபு முடிவெடுத்துள்ளாராம். சினிமாவிற்கு செல்லவிருக்கும் அவர், முதலில் குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த பிறகு முழு நேரம் நடிகராக மாறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

