தீவிர விஜய் ரசிகையைத் திருமணம் செய்த தேன்மொழி சீரியல் நடிகர்!
1603094976000
பிரபல தொலைக்காட்சி நடிகர் நவீன் வெற்றிக்கு திருமணம் முடிந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி’ என்ற சீரியலில் தொகுப்பாளினி ஜாக்லின் கதாநாயகியாக நடித்து வருகிறார். அத சீரியலில் நவீன் வெற்றியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் நவீன் வெற்றி சில தினங்களுக்கு முன்பு சௌமியா கோவிந்தன் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நவீன் திருமணம் செய்துள்ள சௌமியா ‘தளபதி வெறியன்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பயோவில் தெரிவித்துள்ளார்.