கர்ப்பமாக இருக்கிறாரா ஷபானா?- ஆர்யன் சொன்ன அந்த தகவல்!

photo

நடிகர் ஆர்யம் போட்டுள்ள பதிவு, நடிகை ஷபானா கர்பமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

photo

மலையாள சீரியல் நடிகையான ஷபானா தமிழில் ஜீ தமிழில் வெளியான செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அந்த சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமும் ஆனார் ஷபானா. தொடந்து தற்போது சன்டீவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வருகிறார். இவர் பிரபல சீரியலான பாக்கியலெட்சுமி தொடரில், பாக்கியாவின் மூத்த மகன் செழியன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு எக்கசக்க ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “ ஷபூ இங்கபாரு சீக்கிரம் குட்டி ஷபூவ லான்ச் பண்றோம்’ என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷபானா கர்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this story