புகைப்பிடிக்கும் ஷகீமா: உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

photo

பிரபல மலையாள நடிகையான ஷகீலா தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் புகைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

photo

மலையாள சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து பாக்ஸ் ஆபீஸை அதிரவிட்டவர் ஷகீலா. இப்படி கொடிகட்டி பறந்த ஷகிலா தமிழில் சில படங்களில் சில காட்சிகளில் மட்டும்  நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் இவருக்கு தடை விதிக்கவே தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதிலும் இவரது கவர்ச்சி பிம்பத்தை மக்கள் மத்தியில் அடியோடு மாற்றியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்குக்வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவரை அனைவரும் ஷகீலா அம்மா, ஷகீமா என்றே அழைத்தனர். தொடர்ந்து முன்னணி  செய்தி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக பலரை யூடியூப் பிரபலங்கள் பலரை பேட்டி எடுத்து பல அட்வைசுகளை வழங்கி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் துவங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டார். இந்த சீசனில் இவருடன் தமிழ் நடிகையான கிரணும் கலந்துகொண்டார். அவர் கடந்த வாரம் எலிமினேட் ஆன நிலையில் தற்போது நிகழ்ச்சியில் ஷகீலா புகைப்படிக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிரண் சென்றதால் தான் ஷகீலா வருத்தத்தில் புகைக்கிறாராம். இதனை பார்த்த பலரும் அட்வைஸ் எல்லாம் ஊருக்குதானா? குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா செய்வது என வருத்தெடுத்து வருகின்றனர்.

Share this story