ஷகிலா, கிரண் ரத்தோட் கலைகட்டும் ‘பிக்பாஸ் சீசன் 7’.

photo

ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, தெலுங்கு, மராத்தி உள்ளிட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. நேற்று தெலுங்கில் 7வது சீசன் தொடங்கிய நிலையில் மொத்தமாக 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமக்கு நன்கு தெரிந்த ஷகிலா மற்றும் கிரண் ரத்தோட் கலந்துகொண்டுள்ளனர். வழக்கம் போல இந்த சீசனையும் நாகார்ஜுனாதான் தொகுத்து வழங்குகிறார்.

photo

கிரணின் பெயர் தமிழ் பிக்பாஸ்ஸில் கலந்துகொள்வார் என அடிபட்ட நிலையில் அவர் தெலுங்கு பிக்பாஸ்ஸில் கலந்துகொண்டுள்ளார். ஷகிலாவும் கலந்துகொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், கவனமும் பெற்றுள்ளது. அடுத்து சில நாட்களில் தமிழ் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க உள்ள நிலையில் அதில் யார் யார் கலந்துகொள்ள உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story