ஆம்பளையானு கேட்ட சௌந்திரபாண்டிக்கு சவால் விட்ட சண்முகம்.‌‌. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

anna

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகத்தை அவமானப்படுத்த  பரணி அவர் சொல்லிட்டு போனதுல என்ன தப்பு இருக்கு என்று கோபமாக சமூகத்திடம் பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது பரணி இந்த வீட்ல நான் என்ன உன் ரூம் மாதிரி தானே இருக்கேன். நாம என்ன புருஷன் பொண்டாட்டி மாதிரியா இருக்கோம்? உனக்கு உன் தங்கச்சி இங்க தான் முக்கியம், நான் இந்த வீட்ல ஒரு ஆளா இருக்கறதுனால சாப்பிட்டானா இல்லையான்னு கவனிச்சிக்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்ல சண்முகம் பரணியின் ஃபீலிங்ஸை புரிந்து கொள்கிறான்.anna

இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சண்முகம் பரணிக்காக காபி போட்டு வந்து கொடுத்து இனிமேல் நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன் என்று சொல்ல பரணி காபி போட்டு கொடுத்து மட்டுமே நல்ல புருஷன் இல்ல என சொல்கிறாள். 

அதைத்தொடர்ந்து சண்முகம், பரணி இருவரின் கிளினிக் கிளம்ப வண்டியில் போகும்போது நெருக்கமாக ரொமான்ஸாக பேசியபடி செல்கின்றனர். பரணி பூக்கடையை பார்த்ததும் நிறுத்தி மல்லிகை பூ வாங்கி கொடு என்று சொல்லி பூவை வாங்கி சண்முகம் கையில் கொடுக்க இதை வச்சு விட நான் ஒரு ஆள தேடணுமா என்று வதந்தியாக பேச பூக்கடைக்காரம்மா அட உன்ன தான் பா வச்சு விட சொல்றாங்க என்ன சொல்கிறார். 

பிறகு சண்முகம் பரணிக்கு பூ வைத்து விட சௌந்தரபாண்டி அந்தப் பக்கமாக வரும்போது இதை பார்க்க பரணி அங்க பாரு எங்க அப்பா இருக்காரு என்று சொன்னது சண்முகம் இன்னும் ரொமான்டிக்காக பூ வைத்துவிட்டு சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறான். anna

அது மட்டுமல்லாமல் கார்லேயே உட்கார்ந்துட்டு எதுக்கு பாக்குறீங்க இறங்கி வந்து கண்ணுக்கு குளிர்ச்சியா பாருங்க என கலாய்க்கிறான்‌. இன்னும் ஒரே வருஷத்துல என் புள்ளை குட்டி சண்முகம் உங்க மூஞ்சில உச்சரிப்பான் என்று சவால் விட சவுந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். 

பரணி சவால் விட்டா மட்டும் போதாது அதுல ஜெயிச்சு காட்டணும் என்று சொல்ல அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று சண்முகம் பேசுகிறான். இங்கே சனியன் அவன் பாட்டுக்கு சும்மாதான் இருந்தான் அவனை உசுப்பேத்தி விட்ட மாதிரி ஆயிடுச்சு அவனுக்கு ஒரு புள்ள மட்டும் பொறந்துட்டா உங்க நிலைமை அவ்வளவுதான் என்று சொல்ல என் அக்கா எனக்கு நல்லது பண்றாளா கெட்டது பண்றாளா நீ தெரியல பாத்துக்குறேன் என ஆவேசப்படுகிறார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
 

Share this story