'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. சீரியல் நடிகை தான் மணப்பெண்..!

vetri vasanth

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


"சிறகடிக்க ஆசை" சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பாராட்டுக்கள் பெறுகிறது. இந்நிலையில், வெற்றி வசந்த், "பொன்னி" தொடரின் நாயகி வைஷ்ணவி சுந்தர் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டுப் பெற்றோர்கள் முன்னிலையில் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


"திருமணம் என்ற புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறோம்; இந்த வாரம் எங்களின் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் வெற்றி வசந்த். மேலும் வைஷ்ணவி சுந்தருடன் எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த விடியோவுக்கு லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.


 

Share this story