விரைவில் நிறைவுபெறும் சூப்பர் ஹிட் சீரியல்... சோகத்தில் ரசிகர்கள் !

kannana kanne

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியல் விரைவில் நிறைவுபெற உள்ளது. 

சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது சன் டிவியின் ‘கண்ணான கண்ணே’. தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த சீரியலில் நடிகர் பிரத்விராஜ் முதன்மை கதபாத்திரத்திலும், மீரா என்ற கதாபாத்திரத்தில் இளம் நடிகையும் நடித்து வருகின்றனர். 

kannana kanne

பிரசவத்தின் போது தனது மனைவி இறக்க அதற்கு மகள் மீரா தான் என்று மகளை வெறுக்கும் தந்தையின் கதைதான் இந்த சீரியல். இந்த கதைக்களத்தை கொண்டு மிகவும் விறுவிறுப்பாக இந்த சீரியல் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் யுவா மற்றும் மீராவின் காதல் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

kannana kanne

இந்நிலையில் இந்த சீரியலில் விரைவில் நிறைவுபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனது தந்தையுடம் மீரா விரைவில் இணையவுள்ளார். இதனால் சீரியலை மிகவும் சுவாரஸ்சியமாக்கி எடுத்து சென்றுக் கொண்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் இந்த சீரியல் நிறைவுபெறவுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story