முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் !

magarasi

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மகராசி’ சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. 

இல்லத்தரசிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று ‘மகராசி’. சன் டிவியில் டிஆர்பியில் நல்ல இடத்தை பிடித்து வரும் இந்த சீரியல் விறுவிறுப்பாக கதைக்களத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஒளிப்பரப்பை தொடங்கிய இந்த சீரியல் தற்போது 1030 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. 

magarasi

இந்த சீரியலில் ஆர்யன், ஸ்ரீத்திகா சனீஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் விஜய், மௌனிகா தேவி, பிரவீனா, தீபன் சக்ரவர்த்தி, அஷ்வினி, செந்தில்நாதன், நேத்ரா ஸ்ரீ, ரவிசங்கர், சாத்விக், கீர்த்தனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

magarasi

இந்த சீரியலை எஸ்.பி.ராஜ்குமார் மற்றும் என் சுந்தரேஷ்வரன் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலின் கதைக்களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் வரும் ஜூலை மாதத்துடன் சீரியலை முடிக்க குழுவினர் முடிவு செய்துள்ளனர். ‘மகராசி’ முடிக்கப்படுவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

  

Share this story