ரீ என்ட்ரி கொடுத்த பிரபல சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சியில் தெரியுமா ?

sonia bose

 சன் டிவி சீரியல் மூலம் பிரபல சீரியல் நடிகை மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சோனியா போஸ். தனது மூன்று வயதில் ‘இவள் ஒரு நாடோடி’ என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு நம்பரத்தி ‘பூவு’ படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில விருதை பெற்றார். 

sonia bose

அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்த அவர் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சீரியலில் பிசியாக நடித்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிற்கு பிரேக் எடுத்திருந்தார். தற்போது சன் டிவியில் புதியதாக ஒளிப்பரப்பாகவிருக்கும் ‘சபாஷ் மீனா’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் இணைந்துள்ளார். 

இந்த சீரியலில் சோனியா போஸ், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார்.  இந்த சீரியலில் பிரபல நடிகர் அபிஷேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஆனந்தராகம்’ சீரியலின் மூலம் பிரபலமான நடிகை இந்து செளத்ரி இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோன்று இலக்கியா சீரியல் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this story